Thursday, July 30, 2026
37 °c
Tiruvannamalai
33 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

admin by admin
30/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை 28-ஆம் தேதி தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை, டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் டெண்டர் ஒதுக்கீடு, சட்டவிரோதமாக பார்கள் நடத்த அனுமதித்தது, அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், முன்னாள் மண்டல மேலாளர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய தொடர்புடையவர்களும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

AlsoRead

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

வழக்குப்படி, 2021-ஆம் ஆண்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து முன்பணம் செலுத்தியதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஆவணங்களில் மூடப்பட்டதாகக் காட்டப்பட்ட 284 பார்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், போக்குவரத்து டெண்டர் மற்றும் காலி பாட்டில் ஒப்பந்தங்களிலும் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும், அரசியல் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் இருப்பதாகவும், காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறைகேடு மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், விசாரணைக்காக காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறி, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: செந்தில் பாலாஜிசென்னை உயர் நீதிமன்றம்டாஸ்மாக் முறைகேடுமுன்ஜாமீன் மனு தள்ளுபடி
Previous Post

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

Next Post

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

Related Posts

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026
மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

30/07/2026

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

30/07/2026

சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம்

30/07/2026

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜிங்க்ய ரஹானே ஓய்வு அறிவிப்பு
  • அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு
  • மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு
  • டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved