Thursday, August 6, 2026
30 °c
Tiruvannamalai
29 ° Fri
31 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

admin by admin
06/08/2026
in தமிழ்நாடு
0
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், குற்றாலம் பழைய அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத செயல்களை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

AlsoRead

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்

இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குற்றாலநாதசுவாமி கோயில் மற்றும் அருவியைச் சுற்றியுள்ள 152 தற்காலிக கடைகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 80 கடைகளுக்கு மட்டுமே ஏலம் அல்லது ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 72 கடைகள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏலத்தில் சேர்க்கப்படாது என்றும் கூறப்பட்டது.

மேலும், தீ விபத்து ஏற்பட்ட தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்த 62 கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் கோயில் நந்தவனம் அமைக்கப்பட உள்ளதாகவும், மற்றொரு பகுதியில் இருந்த 10 கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடம் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏலத்தில் விடப்படும் 80 கடைகளிலும் எரிவாயு சிலிண்டர் மற்றும் மரவிறகு பயன்படுத்தி சமையல் செய்ய தடை விதிக்கப்படும் என்றும், தீ அபாயம் ஏற்படாத பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நந்தவனத் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், குற்றால சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து, கூட்ட நெரிசல், மருத்துவ வசதிகள், வாகன போக்குவரத்து மற்றும் தீ விபத்து தடுப்பு உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: குற்றாலம்சிறப்பு கண்காணிப்பு குழுதென்காசிமதுரை உயர்நீதிமன்றம்
Previous Post

திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?

Next Post

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

Related Posts

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

06/08/2026
திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?

திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?

06/08/2026

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்

06/08/2026

காவிரி, மேகேதாட்டு விவகாரம் குறித்து முதல்வர் முடிந்தால் பதில் சொல்லட்டும்

06/08/2026

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ‘வெற்றி’ திட்டங்களுக்கு முக்கியத்துவம்

05/08/2026

தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை

05/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை
  • குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு
  • திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள் ஒட்டினால் போதுமா?
  • பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்
  • திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved