Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in மாவட்டங்கள்
0
கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்த்தேக்கம் உபரி நீர் செல்லும் கரையோரம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு செய்வோம் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெலிங்டன் நீர் தேக்கத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் உபரிநீர் வெளியேற்றும் செய்யும் வாய்கால் கரையோரம் பனை விதையை விதைத்து பணியை துவங்கினார். 

ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 7.50 லட்சம் பனை விதைகளும், வனத்துறை சார்பில் 2.50 லட்சம் பனை விதைகளை அனைத்து ஊராட்சிகளிலும் நடுவதற்கான பணிகளும் நடைபெறவுள்ளது. 

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சரண்யா மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

செய்தியளர்களிடம் பேசிய அமைச்சர் கணேசன்,  தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நட்டு ஒரு கோடி பனைமரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டம் சார்பில் 10 லட்சம் பனை மரங்களை வளர்ப்பதற்காக இன்று திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் பனை விதையை விதைத்துள்ளோம். 

தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 7.50 லட்சம் பனை விதைகளும், வனத்துறை சார்பில் 2.50 லட்சம் பனை விதலைகளும் நடப்படும்.

மேலும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் நூறு ஆண்டு பழமை வாய்ந்த நீர் தேக்கம் இதில் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதால், இந்த நீர்த்தேக்கத்தை தூர் வருவதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டு விரைவில் அதற்கான பணிகளை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி  திட்ட இயக்குநர்  சரண்யா, மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் தொழிலாளர் நலவாரிய செயற்குழு உறுப்பினர் கே.என். டி. சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், நகர செயலாளர் பரமகுரு கடலூர் மேற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhகடலூர்கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!கடலூர் மாவட்டம்
Previous Post

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Next Post

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved