Friday, July 24, 2026
27 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in மாவட்டங்கள்
0
பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவக்கி வைத்தார். 

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்வில் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அரசு துறை அதிகாரிகள் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துவக்கப்பட்டு 81 ஆண்டுகளாக நல்ல முறையில் செயல்பட்டுவருகிறது. இதில் சென்ற ஆண்டு ரூ.85 இலட்சத்திற்கு பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூபாய் 1 கோடி ரூபாய் என்ற இலக்கு பட்டாசு விற்பனையை துவக்கி வைத்திருக்கிறோம். 

பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் நேரம் என்பது காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம். பட்டாசுகளை வெடிக்கும் போது மிக கவனத்துடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இந்த மாதம் முதல் தேதியில் இருந்து ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தினமும் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்கிறோம்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

ஒரு சில ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பிரச்சனை இருந்து வருகிறது. அது குறித்து அங்கு பணி புரியும் விற்பனையாளர் எங்களிடம் தெரிவிக்கின்றனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.

மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனைகளுக்கு அனுமதி இல்லை.  தீபாவளி அன்று மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று தீயணைப்பு துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான படுக்கை வசதிகள் நம்முடைய மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhவேலூர்வேலூர் மாநகராட்சிவேலூர் மாவட்டம்
Previous Post

திருப்பத்தூரில் தீஷா ஆய்வு குழு கூட்டம்:சி.என்.அண்ணாதுரை பங்கேற்பு!

Next Post

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved