Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனம் அருகே காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
18/11/2024
in மாவட்டங்கள்
0
திண்டிவனம் அருகே காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

திண்டிவனம் அருகே காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி காதல் பிரச்சனையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் வள்ளி. இவரின் கணவர் லட்சுமிபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

பின்னர் தனது மகள் தீபிகாவுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனம் அடுத்த பெரப்பந்தாங்கல் பகுதியில் வள்ளியின் தந்தை சாமிநாதனுடன் வீடுகட்டி தனது மகள் தீபிகாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தீபிகா மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

இவருக்கும், பெருமுக்கல் அடுத்த உலகாபுரம் பகுதியை சேர்ந்த சக கல்லூரி மாணவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் காதலனுடன் திருமணம் செய்துவைக்க தனது தாயை வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்குத் தாய் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி தீபிகா, நேற்று முன்தினம் இரவு தனது காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்து விட்டார்.

பின்னர் வீட்டின் கதவை தாழிட்டு உள்ளே சென்று சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்போனில் தற்கொலை செய்து கொள்வதாக தீபிகா கூறியதை அறிந்த காதலன், பெரப்பந்தாங்கல் வந்து தீபிகாவின் தாத்தாவிடம் கூறி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது தீபிகா மின்விசிறியில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: திண்டிவனம்
Previous Post

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா !

Next Post

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 222 மனுக்கள் அளிப்பு!

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved