Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/01/2025
in மாவட்டங்கள்
0
கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் ஆண்டுதோறும் 10,000 பேர் பயன் பெறும் வகையில் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் கலைஞர் கைவினை திட்டம் 2024-25 முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண்பாண்டம் வனைவோர், சிற்பக் கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகுக் கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கிலாலான பொருட்கள் செய்வோர், நெசவு செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடுவோர், வண்ணம் தீட்டுவோர், கட்டடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோகப் பொருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர், மீன் வலை செய்வோர் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு தொழில்திறம் சார் மேம்பட்ட பயிற்சியுடன் அவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 இலட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் தொகையில் 25% அதிக பட்சம் ரூ.50,000 மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைஞர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் எந்த வகைத் தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்த பட்சம்

5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டு அடிப்படைத் தகுதிகளும் கொண்டோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க தனி நபரின் போட்டோ, ஆதார் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை.

சுய சான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை மேற்சொன்ன இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

மேலும், இத்திட்டத்தின் கீழ் தச்சர், கட்டடம் கட்டும் வேலை செய்தல், நகைகள் செய்தல், சிகை அலங்காரம் செய்தல், தையற் தொழில், மரசிற்பம் செய்தல், பூ அலங்காரம் செய்தல், கூடை முடைதல், பாசி மணி வேலைப்பாடுகள் செய்தல், மண்பாண்டம் வனைதல் போன்ற தொழில்களுக்கு விண்ணப்பித்த 64 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலான தகவல்களைப் பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.95/242, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151 – 294057ஆகிய எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

Tags: Kallakurichi News
Previous Post

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்

Next Post

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved