Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
14/03/2025
in தமிழ்நாடு
0
பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது போலீசார் அளிக்கும் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி நடத்தும் கட்சிகள் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டணத்தை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரியும், பஞ்சமி நிலம் மீட்க கோரியும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா மற்றும் முகூர்த்த நாள் எனவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை ரத்து செய்து, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், பேரணி நடைபெறும் வழித்தடத்தை மாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தரப்பில், 400 பேர் முதல் 500 பேர் வரை பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும், அமைதியான முறையில் பேரணி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக காவல்துறைக்கு 25,000 ரூபாய் வழங்க நாம் தமிழர் கட்சி நிர்வாகி சசிகுமாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில், காவல்துறை பாதுகாப்பிற்காக பணம் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி, பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தான் காவல்துறை, தினந்தோறும் ஒவ்வொரு கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பணி அல்ல எனத் தெரிவித்தார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப்பணத்தில், காவல்துறை செயல்படுகிறது. மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம், பேரணியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் நிகழ்ந்து, இழப்பு ஏற்பட்டால் அதற்கு நாம் தமிழர் கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர், காவல்துறை பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்ட உத்தரவை நீக்கிய நீதிபதி, இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டணத் தொகையை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags: Madras High Courtpolitical party eventspublic places
Previous Post

தமிழகத்தின் கடன் தொகை ரூ. 9 லட்சம் கோடி

Next Post

80 கோடி பேருக்கு இலவச உணவு? சாதனையா? வேதனையா?

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved