தமிழ்நாடு சட்டப்பேரவைத்துணை தலைவர் கு.பிச்சாண்டி நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பணையகத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பணையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
இவ்வாண்டு புதிய இரக வரவுகளாக, ட்வில் வீவ் ஆயத்த சட்டைகள், ஸ்லப் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள் என பல புதிய இரகங்கள் விற்பனைக்கு உள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் ஆன்லைன் விற்பனையும் செய்து வருகிறது.
தீபாவளிக்கு 30% சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குகிறது. அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட சட்டப்பேரவைத்துணை தலைவர் கேட்டுக்கொண்டார்.
விழாவில் வேலூர் கோ-ஆப்டெக்ஸ் மண்டல அலுவலக மேலாளர் (இரகம்- பகிர்மானம்) த.நந்தகோபால், கைத்தறித்துறை உதவி இயக்குநர் செந்தில்குமார், திருவண்ணாமலை பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்(பொ) ம.குமரவேல் மற்றும் துறைசார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



