திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புடன் தூய்மை பணியாளர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார்.
தூய்மைக் காவலர்களின் மாதந்திர ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்கிட வேண்டும்.மேல்நிலை நீர் த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூ.15,000 வழங்கிட வேண்டும்.
மூன்று ஆண்டுகள் பணி முடித்த தூய்மைப் பணியாளர்களை சிறப்பு கால முறை ஊதியத்திலும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை காலமுறை ஊதிய கட்டுக்கும் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, சுப்பிரமணி, பழனிசாமி, செல்வ பாண்டியன், ராதா, ஊரக வளர்ச்சித் துறை மாவட்டத் தலைவர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



