தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர்,வீரணாம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காக, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தலைமை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் தலைமை வகித்தார்.
வட்டாட்சியர் துரைராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி அவர்கள் அனைவரையும்.வரவேற்று பேசினார். முகாமில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு ஒன்றிய திமுக செயலாளர் கோ.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு குழு அமைப்பாளர் எல்ஐசி து. வேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன்,ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும பலர் கலந்து கொண்டனர்.



