வேலூரில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை இடித்து பத்து நாட்கள் ஆகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே உள்ள மண்டித்தெரு சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததாலும் அந்தப் பகுதியில் சிறு குறு கடைகள் நிறைந்து இருந்ததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன் மாநகராட்சி சார்பில் சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கற்கள் இடிக்கப்பட்டன.
இடிக்கப்பட்ட கற்கள் தற்போது வரை அகற்றப்படாமல் இருப்பதால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் இடிக்கப்பட்ட கற்களை விரைந்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.



