திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (23) என்ற இளைஞர், கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக இறங்கிய போது, நீச்சல் தெரியாத காரணத்தால் மூழ்கி உயிரிழந்தார்.
பாலமுருகன், நெசவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று நண்பர்களுடன் தச்சம்பாடி-செய்யானந்தல் சாலையில் உள்ள விவசாயி சுகுமார் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக இறங்கியுள்ளார். அதில் நீச்சல் தெரியாத காரணத்தால், நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
தகவல் பெறும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலமுருகனின் உடலை மீட்டனர்.
இது தொடர்பாக சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



