வேலூர் விருப்பாச்சிபுரம் ரத்தின கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணியரசி (வயது 73). இவர் மெயின் மெயின் பஜாரில் உள்ள நகை கடையில் நகைச் சீட்டு கட்டி வந்தார். கடந்த 3-ம் தேதி நகை கடைக்கு சென்று விட்டு சீட்டு கட்டிய பணத்திற்கு 4 பவுன் செயின் வாங்கினார்.
பின்னர் செயினை தனது பையில் வைத்துக் கொண்டு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார் அரசு டவுன் பஸ்ஸில் ஏறி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது அதிக அளவில் பயணிகள் இருந்தனர். கூட்டத்தை பயன்படுத்தி பஸ்ஸில் இருந்த மர்ம நபர் மணியரசியிடம் பையில் இருந்த 4சவரன் செயினை நைசாகத் திருடிவிட்டுத் தப்பிச்சென்றார்.
விருப்பாச்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மணியரசி தனது பையில் வைத்திருந்த செயினை பார்த்தபோது அது காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து மணியரசி பாகாயம் போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஹரி விநாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



