செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலமையூர் – திருமணி கேட் இணைப்பு சாலை வழியாக அன்றாடம் பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியாய் சிதிலமடைந்துள்ளது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலையை உடனடியாக சீரமைத்து தருமாறு ரயில்வே துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



