திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வென்குன்றம் ஏரி நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் ஏராளமான மக்கள் குளித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போடுவதால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறியது.
வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் செய்யாற்றில் நீர் வரத்து மூலமாக வென்குன்றம் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதை அறிந்த வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வென்குன்றம் ஏரி கலங்கல் அருகே திரண்டு வந்து வழிந்து ஓடும் நீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.
மேலும் ஏராளமான குழந்தைகள், பெண்கள், நீரில் இறங்கி நீச்சல் பழகுவதும், குளித்து மகிழ்வதுமாக இருந்ததால் வெண்குன்றம் ஏரி திடீர் சுற்றுலாத்தலமாக மாறியது.
அங்கு கூடி இருந்த மக்களிடம் கேட்டதற்கு வந்தவாசி பகுதியில் இதுவரை எந்த ஒரு சுற்றுலா தலமும் இல்லாத நிலையில் மழை பெய்தால் மட்டுமே வென்குன்றம் பகுதியில் நீர்வரத்து ஏற்பட்டு மக்கள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக போக்குவதற்கு இடமாக மாறி வருகிறது என கூறினர்.



