திருவண்ணாமலையில் ஐப்பசிமாத பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐப்பசி மாத பௌர்ணமி நவம்பர் 4 -ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.43மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ம் தேதி புதன்கிழமை
இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் மலையே சிவனாக கருதப்படும். 14 கிலோமீட்டர்தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் நின்று கொண்டு விபூதி பூசி, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வது போன்று பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


