Friday, July 31, 2026
33 °c
Tiruvannamalai
32 ° Sat
31 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

– டி.கே. சிவகுமார் வேண்டுகோள்

admin by admin
31/07/2026
in தமிழ்நாடு
0
தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தற்போதைய பதற்றமான சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வருவதை சிறிது காலம் ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வரின் அலுவலகம் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து நேரில் சந்தித்து ஆலோசிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்று ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் அண்மைய உத்தரவுகளுக்குப் பிறகு நிலவும் சூழல் அந்தச் சந்திப்புக்கு உகந்ததாக இல்லை என்று கருதுவதாகவும், இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுகமான சூழல் நிலவ வேண்டிய அவசியம் இருப்பதால் சந்திப்பை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

“தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் கர்நாடகா வருவது சரியாக இருக்காது. அவர் வரும்போது போராட்டங்கள் நடைபெற்றால் அது இரு மாநிலங்களுக்கும் நல்லதல்ல. இரு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதியான சூழலில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார்.

மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த கர்நாடக அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், எந்த உத்தரவையும் மீற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக பேசிய அவர், மின் உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் அந்தத் திட்டம் தமிழகத்திற்கே அதிக பலன் அளிக்கும் என்று கூறினார்.

AlsoRead

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

இதுகுறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில நலன் தொடர்பான விவகாரங்களில் அனைவரின் ஒத்துழைப்பையும் கர்நாடக அரசு நாடுவதாகவும் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

இதற்கிடையே, மேகேதாட்டு அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: கர்நாடகாடி.கே. சிவகுமார்முதல்வர் விஜய்
Previous Post

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

Next Post

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

Related Posts

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

31/07/2026
3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

31/07/2026

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

31/07/2026

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

30/07/2026

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

30/07/2026

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
  • தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்
  • 3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்
  • காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்
  • ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved