வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பியது. மேல்பாடி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் சுமார் 30 வீடுகள் உள்ளன.
இப்பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதாலும் முறையான கால்வாய் வசதி இல்லாததாலும் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருவில் முழங்கால் அளவு தேங்கியுள்ளது அங்கு உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த பகுதியில் சரியான கால்வாய் வசதி இல்லாததால் மழைத் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுவதாகவும் உடனடியாக மின் மோட்டார் வைத்து மழை தண்ணீரை வெளியேற்றி, தொடர்ந்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



