கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்காகநடைபெற்ற சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின்கீழ் திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவித் தொகைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ்.பிரசாந்த், வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரி வித்ததாவது:
தமிழக அரசு சமூக நலத் துறையின் சார்பில் மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் இலவச எச்ஐவி பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருநங்கைகள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் இம்முகாமில் திருநங்கை அனுஷா என்பவருக்கு கறவை மாடு வாங்கி தொழில் முனைவோராக மேம்பாடு அடைய தாட்கோ திட்டத்தின்கீழ் ரூ.1.50 லட்சத்தில் கடனுதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கடனுதவித் தொகையி னை முறையாக பயன்படுத்தி தொழில்முனைவோராக உயர்ந்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும். இதேபோன்று திருநங்கை களுக்காக நடைபெறும் பல்வேறு சிறப்பு முகாம்களை திருநங்கைகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு. சுபதர்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் செ.தீபிகா ஆகியோர் உடனிருந்தனர்.



