இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துருதலைமையில் தலைமை தேர்தல் அதிகாரி /அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் கே. கே.திவாரி முன்னிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மண்டலஅளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி.ஆதித்யா செந்தில், தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்தரவல்லி, செய்யாறு சார் ஆட்சியர் எல். அம்பிகா ஜெயின், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் (திருவண்ணாமலை), சிவா
(ஆரணி), தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு. திருவண்ணாமலை. கடலூர், தர்மபுரி. கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.



