தூத்துக்குடியில் இருந்து ஒருகன்டெய்னர் லாரிகாற்றாலை இறக்கைகள் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு புறப்பட்டது.
அந்த லாரியை பீகார் மாநிலத்தை சுதேஷ்குமார் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். லாரி, நேற்று (சனிக்கிழமை) மதுரை – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் இணைப்பு சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது திடீர் என்று டிரைவரின் சுட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்று கவிழ்ந்தது. லாரியை ஓட்டிவந்த சுதேஷ்குமார்
உள்ளிட்டவர்கள் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்கள்.
அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து கொடைரோடு வழியாக மாற்றுப்பாதையில் தற்காலிகமாக வாகனங்கள் கடந்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆகியோர் வந்து, 4 கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை மீட்டு அப்புறப்படுத்தினார்கள். லாரி டிரைவர் சுதேஷ்குமார் உள்ளிட்ட உடன் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை இந்த விபத்தினால் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் 3 மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



