திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டைவடக்கு வீதியைசேர்ந்தகூலிதொழிலாளி ரவி -சித்ரா தம்பதியினருக்கு அருண்ராஜ் சுனில்ராஜ் என்ற 2 மகன்கள்.
இதில் சுனில்ராஜ் ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படிததான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சக நண்பர்களுடன் கமண்டல நாகநதி ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
மீன்பிடித்து விட்டு குளிக்க முயன்ற போது கமண்டல நாகநதி ஆற்றில் நீரில் மூழ்கி சுனில்ராஜ் (11) பரிதாபமாக உயிரழந்தார். இதனையடுத்து மகனை காணவில்லை என்று பெற்றோர் ஆரணி நகர காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
மேலும் புகாரை பெற்ற ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மீன்பிடிக்க சென்ற சிறுவன் கமண்டல நாகநதி ஆற்றில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கியதாக தெரிய வந்தது.



