சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெகதலைவர் விஜய்பிரசாரப் பொதுக்கூட்டம்நடத்த அனுமதி கேட்டு அக்கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் பிரசாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி முதன் முறையாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், அவரது பிரசாரப் பயணத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது கரூர் பிரசாரம் கட்சி தொடங்கிய முதலே மாநாடுகள் மூலமாக மட்டுமே மக்களை சந்தித்த விஜய் கடந்த செப்டம்பர் முதல் திருச்சியில் இருந்து பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.
செப் 27ம் தேதி கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அவர் தனது பிரசார சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தினார்.
இந்த நிலையில் டிசம்பர் 4ம்தேதி சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரப் பயணம் மீண்டும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் டிசம்பர் -ம் தேதி சேலம் கோட்டை வளாகம், போஸ் வனாகம், செஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் விஜய் மக்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பிரசாரத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், நேற்று சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் டிசம்பர் நான்காம் தேதி சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு மனு வழங்கியுள்ளனர்.
ஆனால், டிசம்பர் 4-ம் தேதி பிரசாரக் கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. டிசம்பர் 3-ம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். அவர்கள் 4ம் தேதி உடனடியாக திரும்பி வந்தவிட முடியாது அதனைத் தொடர்ந்து டிசம்பர் 6. பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபடுவார்கள்.
இதன் காரணமாக தவெசு சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ள தேதியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தவெக தரப்பில் மற்றொருதேதி கோரப்படும் என தெரிகிறது.



