ராணிப்பேட்டை நவல்பூர் – காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் காரை பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 20),வேலூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சாஜன் (26), ஆற்காடு காந்திநகர் சேர்ந்த பாலமுருகன்(19) என்று தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய கர்நாடக மாநில கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



