திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் புலவன்பாடி ஆகியஊராட்சிகளில் ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்ட கூட்டம் ஒன்றியசெயலாளர் துரைமாமது ஏற்பாட்டில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுகசெயலாளருமான எம்.எஸ். தரணிவேந்தன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வழக்கறிஞர் சுந்தர், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளர் மணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரியாசுரேஷ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.டி.வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



