திருவண்ணாமலை கொசமடத் தெரு சாலைசந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 1969-ல் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டது. சுமார் 56ஆண்டுகள் கடந்தநிலையில் சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த நிலையில் சிலை அகற்றப்பட்டு தற்போதுபொதுப்பணிதுறையின் சார்பில் புதியவெண்கலச்சிலை அந்தபகுதியில் நிறுவப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
சுமார் 56 ஆண்டுகள் கடந்த நிலையில் பேரறிஞர் அண்ணா சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த நிலையில் சிலை அகற்றப்பட்டு தற்போது பொதுப்பணி துறையின் சார்பில் புதிய வெண்கலச் சிலை அந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. முதல மைச்சரிடம் இப்பகுதியில் உள்ள ஒருவர் இந்த சிலையை புதுப்பிக்குமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சிலை புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா.எம்ஜிஆர்.கலைஞர் என மூன்று முதலமைச்சர்களை உள்ளடக்கிய நிகழ்வு இந்த சிலை அமைக்கப்பட்ட நிகழ்வு, ஆகவே பல்வேறு காலகட்டங்களில் மழை, வெயில் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த சிலை பழுதடைந்த நிலையில் இப்போது புதிய பொலிவுடன் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த அரசிலும் இல்லை. இவ்வாறு அமைச்சர் வேலு தெரிவித்தார்.
அப்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநகராட்சி மேயர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், துணை மேயர் பிரியா விஜயரங்கன், திமுக மாநகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



