தண்டராம்பட்டு அருகே காளமஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட நா.மோட்டூரில் செல்போன்டவரில் பேட்டரிகளை 4 நபர்கள் திருடிய போது அவர்களை தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்தனர்.
கைதானவர்கள் விவரம்:- ஆரியமுத்து மகன் ராஜாமணி (வயது 33), செங்கம், குப்புசாமி மகன் குமார் (26), கூட்டபந்தூர் ஜமுனாமத்தூர், கோவிந்தன் மகன் காசி (24), கூட்டபந்தூர் ஜமுனாமத்தூர், அருணகிரி
மகன் குணா (27) குப்பநத்தம் செங்கம்.
இவர்கள் செங்கம், பகுதிகளில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகள் திருடியது ஒப்புக் கொண்டார்கள்.
திருடிய பேட்டரிகளை பறிமுதல் செய்து. அவர்களை தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் ஜெயதேவி, தண்டராம்பட்டு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.



