ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருஆகிய தெருக்களில் உள்ளபூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகளைமர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதில் ஆனந்தன் (37) என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து இரண்டரை சவரன் நகையும், 110 கிராம் வெள்ளி பொருட்களும் திருடிச்சென்றுள்ளனர்.
மேலும்ராணிப்பேட்டை பெல் கம்பெனியில் பணிபுரியும் ராமசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகையும், 93 கிராம் வெள்ளி பொருட்களும் திருடிச்சென்றுள்ளனர். சாந்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து 4 சவரன் நகையும், ரூ.40 ஆயிரமும், இதேபோல் வினோத் என்பவரின் வீட்டில் 3 சவரன் நகையும் என மொத்தம் 8 வீடுகளில் 13 சவரன் நகையும், சுமார் 500 கிராம் வெள்ளி பொருட்களும், ரூ.1லட்சமும் திருடு போயுள்ளன. ஆரணி போலீஸார் மேற்கண்ட நபர்களின் புகார்களை பதிவு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



