திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டிவனம் செல்லும் சாலையில் எஸ்.ஆர்ஜி.டிஎஸ்மெட்ரிக்தனியார் மேல்நிலைப்பள்ளி பேருந்தும் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேற்று மாலை 5 மணி அளவில் நேருக்கு நேர் மோதி கொண்டதில், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் குமார் வலது காலில் பலத்த காயமடைந்தார்.
பேருந்து நடத்துநர் ராஜேந்திரன் சிறிய அளவு காயமடைந்தார். இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.



