செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் படியாக வந்த நபர் மணலி மாத்தூரைச் சேர்ந்த பிரவின்குமார் என்பது தெரியவந்தது.
இவர் வைத்திருந்த ஷோல்டர் பையை சோதனை செய்த போது சுமார் 5 கிலோ கிராம் காஞ்சா இருந்ததை கைப்பற்றி குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



