Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

admin by admin
19/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத திட்டங்களில் ஒன்றான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருவண்ணாமலைமாவட்டஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆர்.பி.எஸ்.கே குழு மூலம் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள் குறித்தும், உட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் வேளாண் மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம் மூலம் நடவு செய்யப்பட்ட கரும்பு பயிரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உர மேலாண்மை குறித்தும், கரும்பு நடவு இயந்திரத்தின் பயன்கள் குறித்தும், மேலும் தேவைப்படும் உதவிகள் குறித்தும் விவசாய பயனாளியிடம் கருத்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து ராதாபுரம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலலகத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் திட்டங்களின் தாட்கோ திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள் பொது சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். செயல்பாடுகளையும், குறுகிய கால பயிர் கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலதனக் கடன்கள் குறித்தும், நகைக்கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள், மேலும் ராதா புரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், அரிசி, பருப்பு, எண்ணை போன்றவற்றின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தண்டராம்பட்டு ஊராட்சியில் ரூ.6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய அலுவலக பணியை ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அறிவுறுத்தினார்.

தண்டராம்பட்டு ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடனுதவி பெற்று தொடங்கப்பட்ட மளிகை பொருட்கள் கடையை ஆய்வு மேற்கொண்டு மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பினாயில், சோப்பு, எண்ணெய், ஊதுவத்தி, கற்பூரம் ஆகிய பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்தும், பொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்தும் கேட்டறிந்தார்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அனிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், விஷக்கடி, நாய்க் கடி மற்றும் பாம்புக் கடிகளுக்கான மருந்து இருப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி தாய்மார்களிடம் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, இணை இயக்குநர் (வேளாண்மை) கண்ணகி, உதவி இயக்குனர் பிரபு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மலர்விழி, திருவண்ணாமலை கோட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வடிவேலன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் மாலதி, தண்டராம்பட்டு வட்டாட்சியர், துரைராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் பழணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: தண்டராம்பட்டுமாவட்ட ஆட்சியர் ஆய்வு
Previous Post

ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் கட்டப்படும்

Next Post

“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved