புழல் சிறையில் கைதிகள் தங்கி இருக்கும் அறையில் சிறை காவலர்கள் வழக்கம் போல் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி நான்சொஜோயசின் (வயது 42) என்பவரிடம் ஆறு சவரன் தங்கச்சங்கிலி இருந்தது தெரியவந்தது.
இவர் சமீபத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் போதைப் பொருள் கடத்தல் வந்தவர். வழக்கில் கைதாகி புழல் சிறைக்கு இது குறித்து சிறை அதிகாரி விசாரித்ததில், கைது செய்யப்படும் பொழுது தங்க நகையை காவல்துறையினரிடம் கொடுத்தால் திருப்பி கொடுக்க மாட்டார்கள்.
அதனால் ஆசனவாயில் வைத்து எடுத்து வந்தேன் என தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதேபோல் புழல் சிறையில் அடிதடி வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய்
என்ற கைதி மறைத்து வைத்திருந்த 2 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையில் அடைத்த போது ஆசனவாயில் மறைத்து அவர் கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது.
புழல் தண்டனை சிறையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கருக்கா வினோத், சோதனையின் போது துணை ஜெயிலர் செல்வம் என்பவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மிரட்டல் விடுத்து ரகளை செய்தான். அவன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



