திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் அதிக அளவு வசித்து வருகின்றனர்.
எத்தலப்பநாயக்கனூர். சிவராத்திரியின் போது வருடம் தோறும் முயல், காடை, கவுதாரி உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்று பகுதியில் உள்ள மழை அடிவாரப் பகுதிக்கு சென்று வேட்டையாடி கொண்டு வந்து குலதெய்வங்களுக்கு படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அதை கிராம மக்கள் அனைவரும் பகிர்ந்து பிரித்து சாமி பிரசாதமாக சாப்பிடுவது வழக்கமாகும்.
இந்நிலையில் கிராம மக்கள் வழக்கம் போல வேட்டையாட சென்ற போது அய்யலூர் வனத்துறையினர் கிராம மக்களை தடுத்து நிறுத்தி, வனவிலங்கு சட்டத்தின்படி வன விலங்குகளை வே ட் டை யாடு வது குற்றம் அதை மீறி வேட்டையாடினால் அபராதம் விதித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து கிராம மக்களை தடுத்து நிறுத்தி வேட்டைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
சாமிக்கு வனவிலங்குகள் வைத்து படையல் வணங்காததால் கடந்த இரண்டு நாட்களாக தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளது. என்றும், எங்களுக்கு வனப்பகுதிக்கு செல்ல அனுமதி தரவில்லை என்றாலும், பட்டா நிலத் திலாவது விலங்குகளை வேட்டையாட வனத் துறையினர் அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி
20 ஊர் கிராம மக்கள் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யலூரை அடுத்து உள்ள கடவூர் பிரிவில் வேட்டை நாய் குலன் நடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீசாரிடம் மறியலில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் கோரிக்கையை வனத்துறையிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்த பின்பு பஸ் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கடும் போக்குவரத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



