Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“அழிவுப் பாதையில் அதிமுக, எடப்பாடி பழனிசாமி இனி வெற்றி பெற முடியாது” – ஓபிஎஸ் கடும் விமர்சனம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவு

Balaji by Balaji
27/02/2026
in தமிழ்நாடு
0
OPS joins DMK

OPS joins DMK

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கட்சியில் இணைந்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் பதவி வகித்திருந்த ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மயுத்தம் தோல்வி – திமுகவில் புதிய அரசியல் பாதை

அதிமுகவை மீட்பேன் என்ற ‘தர்மயுத்தம்’ முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். 76 ஆண்டுகால திமுக வரலாற்றில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு இணைவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

முன்னதாக அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள் திமுகவில் இணைந்த சம்பவங்கள் இருந்தாலும், முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இணைந்தது அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

எம்எல்ஏ பதவியில் தொடரும் ஓபிஎஸ்

திமுகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தனது எம்எல்ஏ பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், எம்எல்ஏ ஐயப்பனும் ராஜினாமா செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

“அனைவரையும் அரவணைக்கும் ஆட்சி” – ஸ்டாலினுக்கு பாராட்டு

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அண்ணா தொடங்கிய தாய்க் கழகமான திமுகவில் மனமகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், “சர்வாதிகாரமாக ஆணவப் போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமி  எந்த காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது. அவரது தலைமையில் அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது” என்றும் கடுமையாக விமர்சித்தார்.

“அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை”

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளதாகவும், அதிமுகவில் அனைவரையும் அரவணைக்கும் போக்கு இல்லை என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

“எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவு எடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தால் போட்டியிடத் தயாராக உள்ளேன். மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை” என அவர் தெரிவித்தார்.

துணைப் பொதுச் செயலாளர் பதவி?

இதற்கிடையில், ஓபிஎஸுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பின்னர் முக்கிய பொறுப்பில் செயல்படுவார் எனவும் கட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: AIADMK crisisbreaking political news Tamil NaduDMK 2026 electionDMK NewsEdappadi PalaniswamiMK StalinO PanneerselvamOPS joins DMKOPS latest newsOPS press meetTamil Nadu political updatesTamil Nadu Politics
Previous Post

எப்ஸ்டீன் கோப்புகள்: இளம்பெண்களுடன் ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் சர்ச்சை – குடும்பத்தினர் விளக்கம்

Next Post

“உண்மை வென்றது!” -மதுபானக் கொள்கை வழக்கில் விடுதலை: கேமரா முன்னால் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்!

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved