Tuesday, May 5, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எப்ஸ்டீன் கோப்புகள்: இளம்பெண்களுடன் ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் சர்ச்சை – குடும்பத்தினர் விளக்கம்

Balaji by Balaji
27/02/2026
in உலகம்
0
Stephen Hawking

Stephen Hawking

0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மறைந்த புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2006-ஆம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கின் போது, அவர் இரண்டு இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த புகைப்படம் அமெரிக்க தொழிலதிபர்  ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான “எப்ஸ்டீன் கோப்புகள்” என அழைக்கப்படும் ஆவணங்களில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி, பணக்காரர்களுக்கு பாலியல் சுரண்டலுக்காக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட எப்ஸ்டீன், இதற்காக தனியார் தீவையும் வைத்திருந்தார். 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், சில மாதங்களிலேயே நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆவணமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவை “எப்ஸ்டீன் கோப்புகள்” எனப் பரவலாக குறிப்பிடப்படுகின்றன. இக்கோப்புகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிரபலங்களின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

இந்நிலையில், ஹாக்கிங் தொடர்பான புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த ஹாக்கிங் குடும்பத்தினர், “புகைப்படத்தில் உள்ள இரண்டு பெண்களும் ஹாக்கிங்கின் நீண்டகால மருத்துவ உதவியாளர்கள். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவ உதவி அவசியமாக இருந்தது. அதனால் அவர்கள் எப்போதும் அவருடன் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது பரவி வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் ஹாக்கிங்கின் பெயர் இடம்பெற்றிருந்தாலும், அவர் மீது முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் மறுத்ததாகவும், ஹாக்கிங் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபட்டதாக ஆதாரம் எதுவும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எப்ஸ்டீன் வழங்கிய நிதியில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஹாக்கிங் பங்கேற்றது உண்மைதான் என்றாலும், அவர் மீது குற்றச்சாட்டு எழுப்புவதற்கு ஆதாரம் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தசை சிதைவு நோயால் (ALS) பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கிங், வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் இருந்து உலகப் புகழ்பெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் 2018 மார்ச் 14-ஆம் தேதி காலமானார்.

Tags: 2006 Caribbean ConferenceEpstein case 2019Epstein FilesEpstein IslandJeffrey EpsteinStephen HawkingStephen Hawking controversyStephen Hawking family statementஎப்ஸ்டீன் கோப்புகள்சர்ச்சை செய்திகள்ஜெப்ரி எப்ஸ்டீன்ஸ்டீபன் ஹாக்கிங்
Previous Post

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் – தமிழக அரசியலில் புதிய திருப்பம்

Next Post

“அழிவுப் பாதையில் அதிமுக, எடப்பாடி பழனிசாமி இனி வெற்றி பெற முடியாது” – ஓபிஎஸ் கடும் விமர்சனம்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Iran Oil Trade

7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா – மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

05/04/2026

ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி அதிரடி மீட்பு: “வரலாற்றுச் சாதனை” என ட்ரம்ப் பெருமிதம்!

05/04/2026

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் வெளியுறவு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

26/03/2026

ஈரானுக்கு அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம்: பேச்சுவார்த்தையை நிராகரித்த தெஹ்ரான்

25/03/2026

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி முடிவுக்கு கரணம் என்ன?

25/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved