Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கும்பகோண டு சேலம்: 51 அடி உயரத்தில் பிரமாண்ட பஞ்சலோக ஆதிபராசக்தி சிலை

ரூ.10 கோடி மதிப்பில் 5 ஆண்டு உழைப்பு!

Balaji by Balaji
28/02/2026
in தமிழ்நாடு
0
Adhiparasakthi Statue

Adhiparasakthi Statue

0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர பிரமாண்ட பஞ்சலோக ஆதிபராசக்தி சிலை சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் பஞ்சலோக சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சிலை தயாரிப்பு பணியை கொரநாட்டு கருப்பூர் சிற்பக்கூடத்துக்கு கோயில் நிர்வாகம் ஒப்படைத்தது. ஸ்தபதி கோபு தலைமையில் 25 முதல் 50-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் இணைந்து பணியில் ஈடுபட்டனர்.

சிலையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக மெழுகால் வார்க்கப்பட்டு அச்சு எடுக்கப்பட்டது. இவ்வாறு 38 அடி உயர மெழுகு வடிவம் முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், நாகம் ஆகிய ஐந்து உலோகங்கள் உருக்கப்பட்டு ஒரே வார்ப்பில் ஊற்றி பஞ்சலோக சிலை வடிவமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிற்பக் கலைஞர்கள் இணைந்து சிலையை பாலிஷ் செய்து அழகுபடுத்தினர். சிலையை நிறுவ 13 அடி உயர பீடமும் தயாரிக்கப்பட்டது. பீடத்துடன் சேர்த்து சிலையின் மொத்த உயரம் 51 அடியும், எடை சுமார் 65 டன்னும் ஆகும்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

முழு சிலையை உருவாக்க சுமார் ஐந்து ஆண்டுகள் எடுத்ததாக சிற்பக்கூட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி சிலை எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக கும்பகோணம் மற்றும் சேலத்திலிருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

புறப்படுவதற்கு முன்பு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிரமாண்ட சிலையை காண அப்பகுதி மக்கள் திரண்டனர். மலர்கள் தூவி வணங்கிய அவர்கள், சிலையின் கலைநயத்தைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.

இந்த சிலை ஓரிரு நாட்களில் பனமரத்துபட்டி கோயிலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 51 Feet StatueAdhiparasakthi StatueBronze Idol MakingGiant Idol TransportIndian Sculpture ArtKoranaattu KaruppurKumbakonamPanchaloha StatueSalem Panamarathupatti TempleTamil Nadu Temple News
Previous Post

‘தாய் கிழவி’ – பாசமும் பகையும் கலந்த நகைச்சுவை விருந்து!

Next Post

கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது எப்படி? – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved