Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுது பாஜக” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை; திமுக போராட்டம்

Balaji by Balaji
04/03/2026
in Uncategorized
0
Anti-Hindi Protest

முதல்வர் ஸ்டாலின் X பதிவு

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களிலும் இந்திப் பெயரையே (‘கர்தவ்ய த்வார்’) பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை எதிர்த்து திமுகவினர் திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

AlsoRead

கொளத்தூர்–பெரம்பூர்: ஸ்டாலின், விஜய் வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!

2026 தமிழக தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் – முழு விவரம்!

போராட்டத்தின் பின்னணி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அண்மையில் புதிய நுழைவு வளைவு ஒன்று கட்டப்பட்டது. இதில் அலுவலகத்தின் பெயரைக் குறிக்க ‘கர்தவ்ய த்வார்’ (KARTAVYA DWAR) என்ற இந்திச் சொல்லை, இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் ஆங்கில வரிவடிவத்திலும் எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

திமுகவினர் முற்றுகை மற்றும் கருப்பு மை எதிர்ப்பு

தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் இன்று ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் மாநகரச் செயலாளர் மற்றும் மேயர் மு.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தின் போது:

  • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.

  • நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்துக்கள் மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் இருந்த இந்திப் பெயர்களை கருப்பு மை (பெயின்ட்) கொண்டு அழித்தனர்.

  • இதில் மாவட்டப் பொருளாளர் துரைராஜ், துணைச் செயலாளர் முத்துச்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதல்வர் எச்சரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பாஜக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

“பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது.

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும்” எஎன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தகட்ட பரபரப்பு

திருச்சியில் நடந்த இந்தப் போராட்டமும், முதல்வரின் காட்டமான அறிக்கையும் தமிழக அரசியலில் இந்தித் திணிப்பு குறித்த விவாதத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. ரயில்வே நிர்வாகம் இந்தப் பெயர் பலகையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: Anti-Hindi ProtestCM StalinDMK Protest TrichyHindi impositionKartavya Dwar ControversyRailway Hindi Name BoardSouthern Railway NewsStalin vs BJPTamil Nadu NewsTrichy Railway Office
Previous Post

“விவசாயக் கடன் ரத்து; இலவச உயர்கல்வி” – தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதிகள்!

Next Post

“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் கொல்லுவோம்” – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

Related Posts

Kolathur Constituency

கொளத்தூர்–பெரம்பூர்: ஸ்டாலின், விஜய் வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

30/03/2026
Gas Cylinder Stickers

சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!

26/03/2026

2026 தமிழக தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் – முழு விவரம்!

25/03/2026

அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஜி.கே.வாசன் முடிவு!

25/03/2026

தனித்து போட்டி.. பெரம்பூரில் களம் காணும் விஜய்! தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

17/03/2026

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்ற கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு

16/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved