Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிவகங்கையில் ரூ.5,300 கோடி முதலீட்டில் MRF டயர் ஆலை: 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியீடு

Balaji by Balaji
04/03/2026
in தமிழ்நாடு
0
MRF Investment Tamil Nadu

MRF Investment Tamil Nadu

0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைக்க MRF நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 4, 2026) தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.

தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டம் சிப்காட் – இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில் அதிநவீன டயர் உற்பத்தி ஆலையை நிறுவ MRF நிறுவனம் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டயர்கள், டியூப்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் (Flaps) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள MRF, இந்தியா முழுவதும் 10 இடங்களில் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. அதில் திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தமிழ்நாட்டில் இயங்கும் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை. தற்போது தனது தொழில்துறையை விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்த 12 ஆண்டுகளில் இந்த புதிய ஆலையை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டை உலகளவில் முன்னணி கப்பல் கட்டுமான மையமாக உருவாக்கும் நோக்கில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

கப்பல் கட்டுமானம், வடிவமைப்பு, பழுதுபார்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு போன்ற துறைகளை ஒருங்கிணைக்கும் முழுமையான கடல்சார் தொழில் சூழலை உருவாக்குவது இக்கொள்கையின் முக்கிய இலக்காகும்.

மேலும், கப்பல் கட்டுமானத் தளங்கள் (Shipyards), பசுமை கப்பல் மறுசுழற்சி (Green Ship Recycling), கடல்சார் உதிரிபாக உற்பத்தி (Marine Component Manufacturing) போன்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், மூலதன மானியம், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைகள் (PLI), சொத்து குத்தகை உள்ளிட்ட பல்வேறு ஊக்கங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழ்வதுடன், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக வளர்ந்து வருகிறது. பரவலான வளர்ச்சி மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Job Opportunities SivagangaMK Stalin Investment AnnouncementMRF Investment Tamil NaduMRF New Factory IndiaMRF Tyre Plant SivagangaSIPCOT Iluppaikudi Industry ParkTamil Nadu Economic GrowthTamil Nadu Industrial InvestmentTamil Nadu Shipbuilding Policy 2026TN Industrial Development
Previous Post

சிவகங்கை, தேனி “தோழி” விடுதிகள்; தட்டப்பாறையில் புதிய கட்டடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

Next Post

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved