திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலையில் விடியற்காலையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இதில் கார் காரை ஒட்டி வந்த டிரைவர் முழுவதுமாக எரிந்துசேதமானது காருக்குள்ளேயேஎரிந்து உடல் கருகிஉயிரிழந்தார்.உடனடியாக அப்பகுதி வழியாகசென்றவர்கள் திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும் எரிந்த நிலையில் இருந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருடன் எரிந்து இறந்தவர் திருவாரூர் மளிகை கடை உரிமையாளர் மகன் ரபீக் என்பதும், திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில்புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் எனவும் தெரியவந்துள்ளது.



