திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்மிபுரம் தம்பு கொட்டம் பாரை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த குடும்பங்கள் மெயின் ரோட்டுக்கு வருவது என்றால் காளியம்மன் கோயில் அருகே உள்ள தரைப் பாலத்தை கடந்து தான் வரவேண்டும். ஆனால் இந்த தரைப் பாலம் ஆறு மாதத்திற்கு முன் பெய்த மழையினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
இந்த பாலம் உடைந்ததால் மக்கள் சுமார் பத்து கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இது உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



