Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

admin by admin
28/09/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் மறைந்த புதைவிட கற் வட்டங்கள்  இருப்பதாக கண்டறிந்து தமிழக தொல்லியல் துறை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு முதல் கட்ட அகழாய்வு பணி நடைபெற்றது.

இதில் 21 ஈமப் பேழைகள் கிடைத்ததில் அதில் 6 ஈமப் பேழைகள் முழுமையாக இருந்தன. மேலும் ஈரக் குறியீட்டு பானை ஓடுகள், சூது பவள மணிகளில் நட்சத்திரக்குறியீடுகள் உள்ள மணிகள், சுடு மண்ணாலான பல்வேறு குறியீடுகள் அமைந்த மணிகள், கற்களால் உருவாக்கப் பட்ட மணிகள், இரும்புக் கோடரிகள், கத்திகள், உளிகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இந்தப் பொருட்களை வைத்து கீழடி போல கீழ்நமண்டியிலும் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைத்து கீழ்நமண்டியை சுற்றுலாத்தலமாக  அறிவிக்கவேண்டும். மேலும் கீழ்நமண்டி பகுதியில் அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு புதைந்து கிடக்கும் பல்வேறு பகுதிகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் பகுதியில் வந்தவாசியும் உண்டு என்பதை  வெளிப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்நமண்டி பகுதியின் அகழாய்வு இயக்குநர் விக்டர் ஞானராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கூறியதாவது:-

இரண்டாம் கட்ட அகழ்ழாய்வு பணியோடு கீழ் நமண்டி அகழ்வாராய்ச்சி பணி முடிவு பெற்றது. மேலும் இதுகுறித்து அகழாய்வு செய்ய வேண்டும் என்றால் அரசு ஆணையிட்டால் மட்டுமே செய்ய முடியும். குறிப்பாக கீழ் நமண்டியில் கிடைக்கப் பெற்ற அகழாய்வு பொருட்கள் தொல்பொருள் துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: திருவண்ணாமலை மாவட்டம்தொல்பொருள் அகழாய்வுவந்தவாசி
Previous Post

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

Next Post

பள்ளிப்பட்டில் போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved