திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் எம்பிபிஎஸ் படித்ததாக போர்டு வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை செய்து வந்த வடிவேல் (52) என்பவரை கைது செய்தனர்.
போலி டாக்டர் வடிவேலை கைது செய்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது.இதையடுத்து, அதே பகுதியில் தன்வந்திரி கிளினிக் நடத்தி வந்த மோகன்குமார் என்பவர் அவசர அவசரமாக தன் கிளினிக்கை மூடிவிட்டு தலைமறைவானார்.
மேலும் இதுபோல் இன்னும் சிலர் இந்த பகுதியில் கிளினிக் நடத்தி வந்த போலியான டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர். வடிவேலு அளித்த தகவலின் பெயரில் அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.



