Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

அமைச்சர் எ.வ.வேலு தகவல்

admin by admin
10/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட இறுதிக் கட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத்துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

இக்கட்டடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 7 முறை நான் இக்கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 95 சதவீதம் முடிவுற்றுள்ளன. இதர பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கட்டடத்தில் அலங்கார வளைவு, பூங்கா, டைல்ஸ் பதித்தல், வண்ணம் பூசும் பணிகள் ஆகியவை முடிவடையும் நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சரால் நேரில் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

அப்போது பொதுப்பணித்துறை அரசு உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுகள்ளக்குறிச்சி மாவட்டம்
Previous Post

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Next Post

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved