Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
07/04/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும், முதலமைச்சர் சாலைshow நடத்த உள்ள பாதையையும் காவல் ஆணையர் ஆய்வு செய்த நிலையில், 2-வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்றும் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் காவல் ஆணையர் சோழவரம் வழியே அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆணையரின் வாகனத்திற்கு பின்னால் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் அடுத்தடுத்த வாகனங்கள் காவல் ஆணையரின் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காவல் ஆணையரின் கார் அப்பளம் போல பயங்கரமாக நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் சங்கர் உயிர் தப்பிய நிலையில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயமடைந்தார்.

தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்தில் காயமடைந்த காவலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிர் தப்பிய காவல் ஆணையர் மாற்று வாகனம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: accidentAvadi PolicePolice CommissionerTamilnadu Police
Previous Post

மோடி ஓய்வுபெற்றால், அடுத்த பிரதமர் யார்?

Next Post

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved