Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
11/11/2024
in மாவட்டங்கள்
0
சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து இந்திலி வழியாக அரசுப் பேருந்து ஒன்று ஈரியூர் சென்றுகொண்டிருந்தது. மேலூர் கிராமம் அருகே சென்ற போது, ஈரியூர் கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் இடது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் பயணம் செய்த மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பலத்த காயமடைந்த 5 பேர்  108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் லேசான காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பேருந்து ஓட்டுனர் குடித்துவிட்டு ஓட்டியதாகவும், கள்ளக்குறிச்சியில் இருந்து வரும்போது அதிவேகமாகவும் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டியதாகவும் குற்றம்சாட்டினர்.  இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார், போக்குவரத்தை சரி செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: சின்னசேலம்
Previous Post

ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்: தமிழ்நாடு அரசு!

Next Post

திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved