Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
19/03/2025
in இந்தியா
0
இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று, மாலை 4.30 மணியளவில் காக்கி உடையணிந்த 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஊருக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த தலித் சமூக மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில், 6 மாதங்கள் மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் உள்பட 24 தலித் சமூகத்தினர் கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த தகவலை கேட்டு நிலை குலைந்து போயின.

தலித் சமூகத்தினர் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவிக்க தெஹுலியிலிருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள சாதுபூர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்தனை கட்சிகளும் பாகுபாடு இன்றி, இந்த விஷயத்தில் நீதி வேண்டும் என போராடின.

AlsoRead

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

ராஜஸ்தானை உலுக்கிய மாபெரும் புழுதிப் புயல்: உருவாகக் காரணம் என்ன?

போலீசாரும் இடைவிடாமல் இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்தனர். நவம்பர் 19, 1981 அன்று உள்ளூரைச் சேர்ந்த லயிக் சிங் என்ற போலீஸ் அதிகாரியால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை, கொள்ளை போன்ற வழக்குகளின் கீழ் குற்றவாளிகள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 14 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர். அப்போதே ஒருவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் விரிவான விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் ராதே உள்ளிட்ட கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 44 ஆண்டுகளுக்குப் பின்னர் உ.பி. மைன்புரி சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் கப்தான் சிங் (60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகியோருக்கு மரண தண்டனையுடன் தலா ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி இந்திரா சிங் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இப்படி இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த கொலைக்குற்றவாளிகளுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டது நாடு முழுவதும் வரவேற்கப்படும் செய்தியாக மாறி உள்ளது.

Tags: Crime News Todaysentenced to death
Previous Post

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

Next Post

சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Related Posts

VD Satheesan

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026
Delhi Hotel Fire

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ராஜஸ்தானை உலுக்கிய மாபெரும் புழுதிப் புயல்: உருவாகக் காரணம் என்ன?

31/05/2026

2 வாரங்களில் 4-வது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை; மக்கள் தவிப்ப்பு

25/05/2026

எபோலா அச்சுறுத்தல்: காங்கோ, உகாண்டா நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

24/05/2026

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு: ஜூன் 18-ல் 26 இடங்களுக்கு வாக்குப்பதிவு

23/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved