Saturday, March 21, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
11/05/2025
in இந்தியா
0
டெல்லியில் திமுக இன்று போராட்டம்: ராகுல்காந்தி பங்கேற்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக உச்ச கட்ட போர்பதற்றம் நிலவியது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்றுமுன்தினம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

AlsoRead

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

டெல்லி சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார். டிரம்ப் அறிவித்த பிறகே மத்திய அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமனதான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த கூட்டம் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ளவும், நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

பகல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலில் அறிவித்த போர்நிறுத்தம் ஆகியவை குறித்து மக்களும்,அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: Rahul Gandhi questionsUS President Trump
Previous Post

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

Next Post

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

Related Posts

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள்

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

20/03/2026
Mamata Banerjee

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

20/03/2026

டெல்லி சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

18/03/2026

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – 12 மாற்று ஆவணங்கள் எவை?

18/03/2026

இந்தூரில் பயங்கரம்: EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

18/03/2026

“அரசியலில் ஓய்வு என்பதே இல்லை” மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான பிரியாவிடை!

18/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரான் போரின் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!
  • தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை
  • அதிமுகவில் இணைகிறாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?
  • தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!
  • உலகளாவிய சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved