வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட கார்கூர் பகுதியில் நேற்றுகாலை சிறுத்தை தாக்கியதில் இரண்டு கன்றுக் குட்டிகள் பலியாகின.
இந்த நிலையில் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்பட்டி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே வனப்பகுதியில் உள்ள குன்றின் மீது சிறுத்தை ஒன்று நடமாடுவதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது சம்பவ இடத்தில் பேரணாம்பட்டு வனத்துறையினர் முகாமிட்டு பட்டாசுகள் வெடித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



