டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள்.
பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 8 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனையடுத்து டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்ட்டுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



