Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

admin by admin
28/09/2024
in இந்தியா, தமிழ்நாடு
0
சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

“டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன்  சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது  பிரதமரின் கையில்  தான் உள்ளது.” என்றும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “இந்த சந்திப்பு  இனிய சந்திப்பாக இருந்தது.  பிரதமரும் எங்களிடம்  மகிழ்ச்சியுடன் பேசினார். 

இந்த மகிழ்ச்சியான ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தியது போல்,  2-ம் கட்ட பணிகளையும்  செயல்படுத்த வேண்டும்  என்பது தமிழகத்தின்  நிலைப்பாடு.

இந்த 2-ம் கட்டப்பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மாநில அரசின் நிதி, கடன் பெற்றும் பணிகள் தொடங்கி, மத்திய அரசுடன் இணைந்த திட்டமாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.  

மத்திய உள்துறை அமைச்சர் இதை ஏற்று, 2020-ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. 

மத்திய நிதியமைச்சரும்  கல்விக் கொள்கையின் ஒரு  விதிமுறையான, மும்மொழிக்  கல்விக் கொள்கையை பின்பற்ற தமிழக அரசு ஒப்புக்  கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்திலும் மொழி  திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்த திட்டத்தின் புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் அந்த சரத்து  இல்லை. 

எனவே, ஒப்பந்தம்  திருத்தப்பட வேண்டும்  என மத்திய அரசிடம்  கூறிவருகிறோம். இந்த சூழலில், புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்யப்படாததை காரணம் காட்டி மத்திய அரசு  நிதியை விடுவிக்காததால்,  சந்திக்கும் வாழ்வாதார  பிரச்சினை குறித்து  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீனவர்கள், மீன்பிடிப்படகுகளை இலங்கை கடற்படைய சிறைபிடித்து  துன்புறுத்துகின்றனர்.  இதுகுறித்து, பிரதமர்,  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பலமுறை வலியுறுத்தி கடிதம் எழுதியும்,  இந்தசம்பவங்கள் தொடர்ந்து  நடைபெறுகிறது. கடந்த 7  ஆண்டுகளில் மிக அதிக  எண்ணிக்கையில் சம்பவங்கள்  நடைபெற்றுள்ளன. 191 மீன்பிடி படகுகள்  145 மீனவர்கள் தற்போது  விவாதித்து உடனடியாக தீர்வு  காண வலியுறுத்தியுள்ளோம்.  இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது.  புதிய அதிபரிடம் இந்த கோரிக்கையை மத்திய அரசு வைக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளோம். 

இந்த 3 முக்கிய கோரிக்கைகளையும்  கவனமாக கேட்டபிரதமர்,  இதுகுறித்து, கலந்தாலோசித்து  முடிவெடுப்பதாக  தெரிவித்துள்ளார். தமிழக  மக்கள் நலன் காக்க தேவையான இந்த 3  கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று  நம்புகிறேன். தமிழகத்துக்கு  ஏராளமானகோரிக்கைகள் சந்திப்பை பயனுள்ளதாக  மாற்ற வேண்டியது  பிரதமரின் கையில் தான்  உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித்  தரவேண்டும் என்று 3  முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.  கோ ரி க்கை க ளி ன்  சாராம்சங்களை தெளிவாக  எழுதி ஒப்படைத்துள்ளோம். 

சென்னை மெட்ரோ இதற்கான நிதி ஒதுக்கப்படும்  என்று 2021-22ம் ஆண்டு  மத்திய பட்ஜெட்டில்  அறிவித்தார். தொடர்ந்து,  மத்திய அரசின் திட்ட  முதலீட்டு வாரியமும்  ஒப்புதலை அதே ஆண்டு  வழங்கியது. இந்த பணிகளுக்கு  இதுவரை ரூ.18,564 கோடி  செலவழிக்கப்பட்டிருந்தாலும்,  மத்திய அரசின் ஒப்புதல்  கிடைக்காததால்,  மத்திய அரசின் நிதியும்  வழங்கப்படவில்லை.  இதனால், மெட்ரோ ரயில் பணிகளில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. எனவே,  தாமதமின்றி நிதியை உடனே வழங்க கேட்டுள்ளேன். 

அடுத்ததாக, மத்திய அரசு 60 சதவீதம், தமிழக  அரசு 40 சதவீதம் நிதியில்  செயல்படுத்தப்படும்  ஒருங்கிணைந்த கல்வித்  திட்டத்துக்கு, இந்தாண்டு  மத்திய அரசு வழங்க வேண்டியது ரூ.2,152 கோடி.  இதில், முதல் தவணை இதுவரை தமிழகத்துக்கு  விடுவிக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் தமிழக அரசு  கையெழுத்திடாதது தான்  காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

காலை உணவுத்திட்டம் போன்ற மற்ற மாநிலங்களில்  செயல்படுத்தப்படாத பல முன்னோடி திட்டங்களையும்  தமிழக அரசு செயல்படுத்தி  வருகிறது. ஆனால், தேசிய ஆசிரியர்களுக்கு சம்பளம்  வழங்க முடியவில்லை.  மாணவர்களின் கல்வி  பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம்.  உடனடியாக  இத்திட்டத்து க்கான மத்திய அரசின் நிதி  அளிக்கப்பட வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளோம். 

மூன்றாவதாக,  தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, உடனடியாக  மத்திய அரசு இலங்கை அரசை வலி யுறுத்தி  மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்று  கூறியுள்ளோம். அடுத்த மாதம் கொழும்புவில்  இந்தியா- இலங்கை இடையில்  நடைபெறும் கூட்டுக்குழு  கூட்டத்தில் இதுகுறித்து  உள்ளன.

அவற்றை தொடர்ச்சியாக வலியுறுத்தி  வருகிறோம். தொடர்ந்து  வலியுறுத்துவோம்.  இந்த 3 கோரிக்கைகள் தொடர்பாகத்தான் 45 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது.  எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக்  கொண்டே இருக்கிறோம்.”  என்று முதல்வர் ஸ்டாலின்  கூறினார். 

Tags: சென்னைபிரதமர் மோடிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு பட்டம்

Next Post

முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved